ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் சூழலால் பங்கு சந்தையில் ஒவ்வொரு 10-க்கும் 9 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் சந்தை மதிப்பில் ரூ.10 லட்சம் கோடி வரை இழந்துள்ளனர். 3,057 பங்குகளில் 2,758 பங்குகள் தொடர் சரிவில் உள்ளன. மேலும் 95 மாறாமலும் மற்றும் 224 பங்குகள் உயர்விலும் உள்ளன. சென்சஸ் 2,024.32 புள்ளிகள் /3.54% சரிவிலும், நிப்டி 50 573 புள்ளிகள் /3.36% சரிவிலும் வர்த்தகம் செய்யப்பட்டன.