Categories
மாநில செய்திகள்

#BREAKING: ரூ.11.32 கோடி….. கே.பி.அன்பழகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி….!!!!!

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது.கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருமகள் வைஷ்ணவி மீதும் வழக்குப்பதிவு.

Categories

Tech |