Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.2000… தமிழக அரசு அதிரடி அரசாணை..!!

தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் 2008 பன்னாட்டு துறையால் உருவாக்கப்பட்டது. இதில் பலர் உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதன்படி இதில் உறுப்பினராக உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா நிதியாக பணம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 6,810 கலைஞர்களுக்கு ரூபாய் 2000 வீதம் வழங்க தமிழக அரசு ரூபாய் 1.36 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதியாக இது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் வாரியத்தில் தற்போது புதிதாக பதிவு செய்த தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து கலைஞர்களுக்கும் இந்த இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |