Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.2500 பொங்கல் பரிசு… முதியோருக்கு முன்னுரிமை… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் போது வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையன்று இலவச வேஷ்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி பொங்கல் பரிசு வழங்கும் போது, வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி கடைகளில் கூடுதலாக ஒரு பணியாளர் நியமிக்கவும், சுழற்சி முறையில் பணம் வழங்க அட்டவணை தயார் செய்யவும், தினமும் 200 ரேஷன் கடைகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 30-ஆம் தேதி வரை மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன்பிறகு ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |