Categories
மாநில செய்திகள்

BREAKING: ரூ.300 கோடியில் “நமக்கு நாமே திட்டம்”…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நமக்கு நாமே திட்டம் விரைவில் செயல்படுத்த படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.300கோடியில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Categories

Tech |