பிகில் படம் தொடர்பாக நடைபெற்று வரும் சோதனையில் ரூ 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களிளும் இந்த சோதனை நடந்து வருகின்றது. இதில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு அலுலவலகம் , வீடு என நடந்த சோதனையில் இந்த 77 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகில் திரைப்படத்தில் 300 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாகத்தான் வருமான வரித் துறை தொடர்பான புகாரின் அடிப்படையில் நடைபெற்ற இந்த சோதனையில் பத்திரங்கள் , முக்கிய ஆவணக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சோதனை இன்னும் முடியவில்லை , சோதனை நடந்து கொண்டிருக்கும் என்றும் , நடிகர் விஜய் , அவரின் மனைவி சங்கீதா விடமும் வாக்குமூலம் நடைபெறும் பணி நடந்து வருவதாகவும் , நாளை வரை இந்த சோதனை தொடரும் எனவும் ரூ 300 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.