தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க இலக்கியமா மணி என்ற விருது உருவாக்கப்படும். திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். புகழ்பெற்ற விருதுகளைப் பெற்ற தமிழக எழுத்தாளர்களை ஊக்குவிக்க கனவு இல்லம் கட்டித்தரப்படும் என்று கூறியுள்ளார்.