கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.