ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகத் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களில் பணிபுரியும் இடத்திலும், அவர்களின் ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்படாத இடத்திலும், ரேஷன் பொருட்களை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிசெய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட்டு வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.