Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் வன்முறை – போலீசார் துப்பாக்கிச்சூடு …!!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் அவரின் மனைவி டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல இருக்கின்றார். இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் அரங்கேறுள்ளதால் அதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |