தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நவம்பர் 11ஆம் தேதி வடதமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.