Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – வானிலை ஆய்வு மையம்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில்  தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து வட திசையில் நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |