மதுரை மாவட்டம் அண்ணா நகர் செண்பகத் தோட்டம் பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் மற்றும் கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றதால் ரவுடியின் காலில் போலீசார் சுட்டு பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ரவுடி குருவி விஷயம் பெண்ணொருவரை வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் 100 க்கும் போனில் புகார் கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த போலீசார் ரவுடியை சுற்றிவளைத்தனர். அப்போது ரவுடி மற்றும் அவரின் கூட்டாளிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது m