வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க மசோதா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் போராட்டம்
நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஆக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 10.5% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.