Categories
மாநில செய்திகள்

BREAKING: வராக நதியில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெய மங்கலம், குள்ளபுரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும் படி தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |