நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்கள் வலிமை எதிர்பார்த்த நிலையில் இன்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.