Categories
தேசிய செய்திகள்

BREAKING : வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடிவு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் முக்கிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும் ஒரே நபர் வெவ்வேறு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |