மேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையடுத்து வாக்காளப் பெருமக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் கூச் பெஹர் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் முதன்முறை வாக்களிக்க சென்ற 18 வயது ஆனந்தா பரமன் என்பவரும் வாக்குச்சாவடி முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.