Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற மர்ம நபர்கள் – பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்தனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து 7 மணிக்கு தேர்தல் முடிவடைந்தது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூக்கி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றவர்கள் தேர்தல் பணியாளர்கள் என்ற போலி அடையாள அட்டை அணிந்து இருந்தனர். அவர்களை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |