Categories
மாநில செய்திகள்

#BREAKING: வாக்குப்பெட்டி தூக்கி வீச்சு…. தேர்தல் ஒத்திவைப்பு…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் தகராறு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது வாக்குப் பெட்டி தூக்கி வீசப்பட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக, அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |