Categories
மாநில செய்திகள்

#BREAKING: விசிகவினர் மீது போலீஸ் தடியடி…. மறைமுக தேர்தலில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் (04.03.2022) இன்று நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 2 பதவிகளிலும் திமுக வெற்றி பெற்றதால் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Categories

Tech |