ஏவிஎம் தயாரிப்பில் விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் காலமானார்..
விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் 150வது படமாக உருவான மாநகர காவல் படத்தின் இயக்குனர் எம்.தியாகராஜன் இன்று அதிகாலை ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் தெரு ஓரமாக இறந்து கிடந்துள்ளார்.. கருத்து வேறுபாட்டால் குடும்பத்தை விட்டு பிரிந்து சாலிகிராமத்தில் வசித்து வந்தார் எம்.தியாகராஜன். ஏவிஎம் ஸ்டுடியோ அருகே சாலையோரம் கிடந்த தியாகராஜன் உடல், உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.. இவரது மறைவு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.