நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும், முக கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.