தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலுக்கான முன்னோட்டம் வெளியாகி உள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்துள்ள பாடல் பிப்.14ஆம் தேதி வெளியாகும். அரபிக் குத்து என்ற இந்தப் பாடலுக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பாடலுக்கான முன்னோட்டத்தைப் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.