பிற தலைவர்களோடு இணைத்து விஜய் போஸ்டர் ஒட்டக் கூடாது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் பல இடங்களில் போட்டியிட இருக்கிறது. இதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் மன்றத்திடம் இருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது.
அதாவது, பிற தலைவர்களுடன் விஜய் படத்தை இணைத்து போஸ்டர் ஒட்டுவது கூடாது. விஜய் மக்கள் இயக்கம் ஆர்வமிகுதியால் ஆர்வ கோளாறால் இதுபோன்ற போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.. மேலும் அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தை உள்ளடக்கி போஸ்டர் வெளியிடுவதை விஜய் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்..