Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”விஜய் வந்தால் ஏற்போம்” காங்கிரஸ் கட்சி திடீர் அழைப்பு …!!

நடிகர் விஜய் தமிழக காங்கிரஸ் கட்சியின் இணைந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

பிகில் படம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை எழுப்பிய நிலையில், ரஜினி எதிர்ப்பு , விஜய் ஆதரவு என்ற சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது. ரஜினி கூறக்கூடிய கருத்து அனைத்துக்கும் எதிர்ப்பு  தெரிவித்து வந்தார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.

அதே போல நடிகர் விஜயிடம் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை தொடர்பாக  அதிக அளவிலான ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்த கே. எஸ் அழகிரி இளைஞரின் நம்பிக்கை நாயகனாக இருக்கக்கூடிய நடிகர் விஜய் எதற்கும் அஞ்ச கூடாது என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கூட நடிகர் விஜய் இளைஞர் காங்கிரசில் இணைவார் என்ற ஒரு கருத்து பேசப்பட்டது. மேலும் அவர் இது தொடர்பாக அப்போது ராகுல் காந்தியை விஜய் சந்திக்கலாம்  என்றெல்லாம் கருத்து எழுந்த நிலையில் தான் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை கே எஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அது தொடர்பான கேள்வியை முன்வைத்தபோது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் காங்கிரசில் இணைவது என்று பேசப்பட்ட தாகவும் , ஆனால் அவருக்கு அவரை அழைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அதே போன்று தற்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனமுவந்து ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதே போல நடிகர் ரஜினிகாந்திற்கு சலுகைகளை வழங்கிய வருமான வரித்துறை விஜய்க்கு ஏன் சலுகை வழங்க மறுத்தது என்ற நியாயத்தின் அடிப்படையில் தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ரஜினிக்கு எதிராகவும் பேசவில்லை , விஜய்க்கு ஆதரவாகவும் பேச வில்லை என்றும் அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |