தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் காவலர்களுக்கான சலுகைகள், விடுமுறை போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுஇடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாகுவதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை களைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.