Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: விடைத்தாள் திருத்தும் பணி…. ஆசிரியர்கள் புறக்கணிப்பு… பரபரப்பு…!!!

தமிழகத்தில் 10 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்த பணியில் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 8 வரையும், பத்தாம் வகுப்பிற்கு ஜூன் 9 வரையும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆசிரியர்களின் விருப்பம் இன்றி மையங்களில் பணி நியமனம் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Categories

Tech |