சென்னை மாநகராட்சி அனுமதியின் அடிப்படையில் மட்டுமே கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக்குறிப்பின் அடிப்படையில் கட்டிடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய கட்டிடங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது .
Categories