பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹைதராபாத்தில் மாதப்பூர் பகுதியில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுள்ளார். அப்போது திடீரென பைக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பலத்த அடிபட்ட சாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த அடிபட்டது சுயநினைவின்றி இருக்கும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாக கடவுளை வேண்டுவதாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.