Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: விமான நிலையத்தில் பரிசோதனை கட்டணம் குறைப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆர்.டி.பி.சி.ஆர்.டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு, ரேபிட், RTP-PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேபிட் பரிசோதனை கட்டணம் ரூ. 3,400 இலிருந்து ரூ.2,900 க்கும், RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ.700 இலிருந்து ரூ.600 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |