கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் ரூ.13,413 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்ய வந்துள்ள தொழிலதிபர்களுக்கு நன்றி. சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் 3வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் டைடல் பார்க்குகள் அமைக்கப்படும். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எல்லோருக்கும் அளித்துக் கொண்டு வருகிறோம். நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவது தான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.