Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |