Categories
மாநில செய்திகள்

BREAKING : விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி…   ஓபிஎஸ் பாராட்டு…!!!

விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி என்று ஓபிஎஸ் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணி அளவில் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருவதால், அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் “வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதன் மூலம் பிரதமர் மோடியின் பெருந்தன்மையும், விவசாயிகள் மீது வைத்திருக்கும் அக்கறையும் வெளிப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் அறிவிப்பு, அவரின் பெருந்தன்மை, விவசாயிகளின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |