2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
● செம்மரம், சந்தனம், மகாகனி உள்ளிட்ட மதிப்புமிக்க மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
● அறுவடை செய்த தானியங்கள் மழையில் நனையாமல் காக்க 60 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ 5 கோடியில் தார்ப்பாய் வழங்கப்படும்
● கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன்னுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூபாய் 195 கோடி வழங்கப்படும்.
● அறுவடைக்குப் பின் நடைபெறும் நெல் சாகுபடிக்கு ரூபாய் 5 கோடி வழங்கப்படும்.