Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடியாது… மத்திய அரசு… பரபரப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சில திருத்தங்களுக்கு தயார் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என எழுத்துப்பூர்வமாக அளிக்க அரசு முன் வந்துள்ளதாக போராட்டம் நடத்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் ராகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்தும் உத்தியா அல்லது நிரந்தர தீர்வா என்று தெரியவில்லை.

Categories

Tech |