நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியின் கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வுக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்துபோனார்.. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் விவேக் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதையடுத்து தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.. இந்நிலையில் நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய அரசின் வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது..