Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

#BREAKING: வீடு இடிந்து 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி… “தலா ரூ 5,00,000 நிவாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து பலியான 9 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும் கனமழையால் வீடு இடிந்து 5 பெண்கள் 4 குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன் என்றும் கூறியுள்ளார்..

Categories

Tech |