இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகின்றது.
ஆனால் கொரோனா இரண்டாவது அலையைப் போல மூன்றாவது அறை தீவிரமாக இருக்காது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், தொற்றுநோய் துறை நிபுணர்கள், லண்டன் இம்பீரியல் கல்லூரி பொது சுகாதாரத்துறை உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா இரண்டாவது ஆளை உச்சத்தின் போதே 40 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதனால் மூன்றாவது தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது.