தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் திருச்சி கொள்ளிடம் ஆற்றங் கரையோர மக்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே வெள்ள அபாயம் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் தகவல் அளிக்க 1077 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9384056213 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.