Categories
தேசிய செய்திகள்

BREAKING : வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது.

பொதுவாக பல நாட்டில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் லட்சத்தீவு பகுதியில் சற்று வித்யாசமாக ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் லட்சத்தீவு பகுதிகளில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளதால் அங்கு வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இனி வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதனால் இஸ்லாமியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வெள்ளிக்கிழமை பதில் பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று அறிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |