மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற இருப்பதால் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இல்லத்தை அரசு அதிகாரிகள் இரண்டு முறை ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது காலை 11 மணியில் இருந்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் இந்த வேதா இல்லத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜெயலலிதா வாழ்ந்த இந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, பொது மக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் அதிகாரிகள் எவ்வளவு தூரத்திற்கு மக்களுக்கு அனுமதி அளிக்க முடியும் என்றும் அவர்களை எந்த வழியாக உள்ளே விடலாம் என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் வேதா இல்லத்தில் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு பராமரிப்பதற்கான அவசர சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வேதா இல்லம் அறக்கட்டளையாக மாற்றி அமைக்கப்பட்ட பின் அந்த அறக்கட்டளைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.