சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.