வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4:17 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலஅதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.