Categories
மாநில செய்திகள்

BREAKING: வேலை…. வேலை…. TNPSC அதிரடி அறிவிப்பு…!!!

உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதாவது: “உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கான கலந்தாய்வு தேதி, அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் தெரிவிக்கப்படும்.

மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-03, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 08.12.2021 முதல் 10.12.2021 வரையில் நடைபெற உள்ளது” என்று TNPSC அறிவித்துள்ளது.

Categories

Tech |