மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அதனை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளதாவது: “மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.