1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது..
இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய அடையாள அட்டை , சீருடை ,பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிய பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளது.