கரூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அதிலும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் இன்று மதியம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.