தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக நேற்று இரவு செய்தி வெளியானது.மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் மே 13ம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்றும், நடப்பு கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் மே 13ம் தேதி எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை இறுதி தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது என்று சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Categories