இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது.
மொத்த பாதிப்பு :
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,629 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,00,328ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35,058 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11,760 பேருக்கும், குஜராத்தில் 11,746 பேருக்கும், டெல்லியில் 10,054 பேருக்கும், ராஜஸ்தானில் 5,507 பேருக்கும், உத்தர பிரதேஷத்தில் 4,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை :
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 2,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் அதன் மொத்த எண்ணிக்கை 39,233ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,437 பேரும், குஜராத்தில் 4,804 பேரும், டெல்லியில் 4,406 பேரும், தமிழ்நாட்டில் 4,406 பேரும்,ராஜஸ்தானில் 3,218 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இறப்பு :
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 131 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 3,156ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,259 பேரும், குஜராத்தில் 694 பேரும், மத்தியபிரதேசத்தில் 242 பேரும், மேற்குவங்கத்தில் 244 பேரும், டெல்லியில் 160 பேரும், ராஜஸ்தானில் 138 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் :
கொரோனா பாதித்த 57,933 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 25,372 பேரும், தமிழ்நாட்டில் 7,272 பேரும், குஜராத்தில் 6,2482 பேரும், டெல்லியில் 5,409 பேரும், மத்திய பிரதேஷ் மாநிலத்தில் 2,549பேர் கொரோனா தொற்றால் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.